இனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை!

0
163
There is no more permission to hold rallies and demonstrations! Strict action if violated!
There is no more permission to hold rallies and demonstrations! Strict action if violated!

இனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை!

கோவையில் உக்கடம் என்ற பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஒன்று நடந்தது.அதில் கார் ஒன்று வெடித்து சிதறியது.அந்த  காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில் காரை சுற்றி சிறு ஆணிகள் ,இரும்பு குண்டுகள் இருந்தது.அதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு கோவை சென்று நேரில் ஆய்வு செய்தார்.

இதனைதொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டத்தில்,  இலங்கையில் 269 பேர் பலியான சம்பவத்தில் ஜமேசா முபினிடமும் விசாரணை செய்தது தெரியவந்தது.இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி வெடித்து சிதறிய காரை ஒட்டிவந்த வரும்  ஜமேசா முபின் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையை என்ஐஏ பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் உளவு பிரிவு போலீசார் ரகசிய கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்ட போலீசார்களும் அவரவர்களின் மாவட்டங்களுக்கு தகுந்தவாறு பாதுகாப்பு வியூகங்களை வகுத்துள்ளனர்.அந்த வகையில் சென்னையிலும் பாதுகாப்பு ,கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் சென்னையில் இன்று முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி இரவு 11மணி வரைக்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அமலில் இருக்கும் வரை இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Previous articleகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான 200க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
Next articleகட்சித் தலைவருக்கே மரியாதை இல்லையா? கோவையில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம் கட்சிக்குள் பிளவா?