விஜயை அரசியலில் வழிநடத்த ஆள் இல்லை!! நடிகை இந்திரஜா அட்வைஸ்!!

Photo of author

By Gayathri

ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்டேட்டியில், விஜய் ஒரு முன்னணி நடிகர். அவர் நடிப்பதில் திறம்பட செயல்படுபவர். தற்சமயம் அவர் நடிப்பை விட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கப் போவதில்லை என்பது பலருக்கும் இன்றளவும் துக்கமான செய்தியாகவே உள்ளது. எனினும், நடிப்பை தாண்டி மக்களுக்கு என்று ஒரு அடியை எடுத்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

நடிகர் விஜய்க்கு அரசியல் பழக்கம் இல்லை. இவர் வீட்டை விட்டு வெளிவராமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் எனத் தகவல் கசிந்து இருந்தது. அதை முறியடிக்கும் வகையில் அவரது பரந்தூரின் பயணம் அமைந்திருந்தது.

இந்திரஜா கூறிய அட்வைஸ் :-

கூட்டத்தை பார்த்து எல்லாம் நம்பிவிடக்கூடாது. கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விடாது. நடிகர்கள் சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் மக்கள் நலனுக்காக கட்சி தொடங்கிய போது அருகில் இருந்து பார்த்தவள் நான். விஜயிடம் தமிழக மக்களின் நலன் குறித்து நிறைய திட்டங்கள் உள்ளன. ஆனால் அவரை அரசியலில் வழிநடத்த சரியான ஆள் இல்லை என்பதே நிதர்ஷன உண்மை என்றார். மேலும், தற்சமயம் விஜய்க்கு ஆலோசனை கூற தான் ஆள் தேவை. மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.