மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

Photo of author

By Rupa

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது முடிவுக்கு வந்து மக்கள் படி படியாக நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப  முயல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா-வை அடுத்து பல பிரச்சனைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மக்களும் மூன்றாவது அலையை நினைத்து கவலையுற்று வருகின்றனர்.

இந்நிலையில்,முதலில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வந்தாலும் தற்போது இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்கள் நடப்பதை கண்டு மக்கள் தங்களின் உயிர்களை காப்பாற்றிக்கொள்ளவும் தற்போது தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.மக்கள் விழிப்புணர்வுடன் தற்போது தடுப்பூசி செலுத்த முன் வருகையில் மத்திய அரசோ தற்போது தடுப்பூசி வழங்குவதை தாமதாம் செய்து வருகிறது.அதனையடுத்து மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் சுப்ரீம் கோர்ட் ஆணையின் படி,மேகதாது அணை கட்டுவதற்கு காவேரி கீழ் படுகையில் உள்ள மாநிலங்கள் அனுமதி தந்தால் மட்டுமே அணையை கட்ட முடியும் என கூறியது.ஆனால் தற்போது கர்நாடக அரசு நீதிமன்றம் கூறியதை மீறி அணை கட்டுவதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதுமட்டுமின்றி இதுகுறித்து மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த மனுவையும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை.அந்தவகையில் மீண்டும் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை காண ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்றார்.

தற்போது சென்ற போது பிரதமரை கண்டு மேகதாது அணை கட்டுதல் விவகாரம் பற்றி பேசினார்.மேலும் மேகதாது அணை கட்டுதலில் பிரதமர் எங்களுக்கு ஆதரவாக இருப்பாதக உறுதியளித்துள்ளார்.பிரதமரை போலவே ஜல்சக்தி அமைச்சரும் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.அணை கட்டுவதில் ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டால் அதற்கு சிறிதும் இடமில்லை என செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.குடியரசு தலைவருக்கு நம் மதுரையின் புகழை எடுத்துரைக்கும் மனோகர் தேவதாஸின் the multiple facets of my Madurai என்ற புத்தகத்தை ஸ்டாலின் பரிசளித்தார்.மதுரையில் நூலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கும் மற்றும் கிண்டியில் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.