கில்லி படத்தில் தங்கை கேரக்டரே கிடையாது..!! பிரபல நடிகர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

Photo of author

By Vijay

கில்லி படத்தில் தங்கை கேரக்டரே கிடையாது..!! பிரபல நடிகர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கில்லி. இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். புதிதாக வெளியாகும் படத்தை விட கில்லி படத்தின் வசூல் தான் அதிகமாக உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 20ஆம் தேதி வெளியான இந்த படம் இப்போது வரை 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது முதல் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ள தகவல் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமல்ல அழகி படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்து அசத்திய நடிகர் சதீஷ் ஸ்டீபன் தான்.

அதாவது தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி. ஒக்கடு படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தானாம். எனவே கில்லி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க சதீஷ் ஸ்டீபனிடம் இயக்குனர் தரணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரும் சம்மதம் கூறி டெஸ்ட் ஷூட் கூட எடுத்து முடித்து விட்டாராம்.

ஆனால் கடைசி நேரத்தில் இயக்குனர் தரணி தம்பிக்கு பதில் தங்கை இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரின் முடிவை மாற்றியுள்ளார். அப்படி வந்தது தான் விஜய்யின் தங்கை கேரக்டராம். இருப்பினும் இந்த காம்போ தான் பெஸ்ட்டாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.