தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!!
திமுக எம்பி கனிமொழி திரைத் துறையில் புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் வேலு ஆசான் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது நடைபெறப்போகும் ஈரோடு இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி கட்சியுடன் மிகப்பெரிய வெற்றி காணும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.அதேபோல அதிமுக தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ், சிவி சண்முகம், ஜெயக்குமார் என ஒவ்வொரு திசையாக இருந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒன்றிணைந்தாலும் ஒரு பொழுதும் வெற்றிக்கான முடியாது. அதற்கு மாறாக திமுக கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறும்.
அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என எந்த ஒரு அறிக்கையிலும் நாங்கள் கூறவில்லை அது தவிர தமிழ்நாட்டில் உள்ள மது கடைகளின் எண்ணிக்கை தான் குறைப்பதாக நாங்கள் கூறினோம் என தெரிவித்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கூறிய வாக்குறுதிகளில் தற்பொழுது வரை முழுமையாக எதனையும் நிறைவேற்றவில்லை அந்த வரிசையில் தற்பொழுது வரை இந்த மதுக்கடை எண்ணிக்கை குறைப்பு இருந்து கொண்டே தான் உள்ளது என பொதுமக்கள் தங்களது புலம்பலை கூறி வருகின்றனர்.