காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

Photo of author

By Savitha

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

Savitha

Updated on:

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா ஆயிரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிராம், அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்ற மாணவியை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் லட்சுமி பிரியா எர்ணாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்பதற்காக சேர்ந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்க தொடங்கினார்.

ஆனால், முதல் காதலன் அபிராம், தனது காதலில் இருந்து பின்வாங்காத நிலையில், இரண்டாவது காதலை தொடர லட்சுமி பிரியாவுக்கு முதல் காதல் தடையாக இருந்து வந்ததாக தெரிகிறது. அதையொட்டி, முதல் காதலனை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்ட லட்சுமி பிரியா, அபிராமிடம் நைசாக பேசி வரவழைத்து சில இளைஞர்களோடு சந்து அபிராமை காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

பின்னர் எர்ணாகுளம் அருகே ஆள் இல்லாத வீட்டிற்குள் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து விடடயோ பதிவுசெய்துள்ளனர். மேலும் அபிராமி கைக்கடிகாரம் ரொக்கப்பணம் ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் தங்க சங்கிலி உள்ளிட்டவற்றையும் பறித்துள்ளனர்.

பின்னர் எர்ணாகுளம் அருகே அபிராமை காரிலிருந்து தள்ளிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இது தொடர்பாக அபிராம் அளித்த புகாரின் பேரில் லட்சுமி பிரியா மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, அக்கும்பலை சேர்ந்த எர்ணாகுளம் அமல் என்பவரை கைது செய்துள்ளனர்.

லட்சுமி பிரியா உள்ளிட்டோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கேரளாவில் கல்லூரி மாணவனை காதலி நண்பர்களோடு சேர்ந்து கடத்தி சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.