இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது!..
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனக் தமிழக அரசின் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்கு நாள் குடிநீர்த் தேவையோ! அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலத்தில் நீர்ப் பற்றாக்குறை நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீரும் சற்று மோசமடைந்துள்ளது.
நம் நாட்டில் கடல்களில் உள்ள நீரும் வற்றத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. குடிநீர் தேவையும் அதிகரித்தது. ஆனால் போதிய அளவு குடிநீர் இருப்பு இல்லாததால், தமிழகம் மிகப்பெரிய அளவில் தடுமாற்றத்தைச் சந்தித்தது. மழைநீர் சேமிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு போன்றவற்றை நாம் சரிவரச் செய்யத் தவறியதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
குறிப்பாகச் சென்ற ஆண்டு போதிய அளவு மழைப்பொழிவு இருந்தது, இதன் காரணமாகக் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், சென்ற ஆண்டு போதிய அளவு மழைப்பொழிவு இருந்ததாலும்; இந்த ஆண்டும் சற்று நல்ல மழை பெய்ந்துள்ளதால் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் இருக்காது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ! விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் எப்போதும், நம் தமிழகத்தில், பிரச்சனை தான் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.