நீங்கள் கருவுறுதலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவராக இருந்தால் ஆரோக்கியமாக உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.பாலியல் வாழ்க்கை சிறப்பானதாக இருந்தாலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இளம் தம்பதியர் கருவுறுதலுக்கு திட்டமிடும் பொழுது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் உணவு.நீங்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எளிதில் கருவுறுதலை ஊக்குவிக்கும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்து கருத்தரிப்பை துரிதமாக்குகிறது.கரு ஆரோக்கியமாக வளர நீங்கள் முன்கூட்டியே ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள திட்டமிட வேண்டும்.
கருவுறுதலை எளிதாக்கும் ஊட்டச்சத்து உணவுகள்:
1)வைட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இது கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டுமின்றி கருச்சிதைவு உண்டாவதை தடுக்கிறது.
2)வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் கருவுறுதலை எளிதாக்குகிறது.வைட்டமின் டி சத்து ஆரோக்கியமான கருவுறுதலுக்கு வழிவகுக்கிறது.
3)ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் கருவுறுதலை ஊக்கட்படுத்துகிறது.
4)பச்சை இலை காய்கறிகளில் போலிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.கருவுற நினைப்பவர்கள் கீரைகள் மற்றும் காய்கறிகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.
5)முட்டைகோஸ்,கேரட்,தக்காளி,உருளைக்கிழங்கு போன்ற காய்கறி உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.அதேபோல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.