கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்!

Photo of author

By Rupa

கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்!

நம்மில் நிறைய பேருக்கு கழுத்து,அக்குள்,தொடை உள்ளிட்ட பகுதிகளில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறி விடுகிறது.இதேபோல் இரண்டு தொடைகளும் உரசுவதால் அங்கு அதிகப்படியான வியர்வை சேர்ந்து அந்த இடம் முழுக்க கருப்பாக மாறி விடுகிறது.இவ்வாறு கழுத்து,தொடை,அக்குள்,மூட்டு உள்ளிட்ட பகுதிகளில் அழுக்குகள் படிந்து கருமையாக காட்சி தருவதை நமது வீட்டில் உள்ள 2 பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விடலாம்

தேவையான பொருட்கள்:-

*சந்தனக்கட்டி          – 3

*ரோஸ் வாட்டர்        – 3 ஸ்பூன்

 

செய்முறை:-

1.ஒரு சிறிய பவுலில் 3 சந்தனக்கட்டி அல்லது சந்தனக்கட்டை விழுதுகள் சேர்த்து கொள்ள வேண்டும்.

2.மூன்று தேக்கரண்டி அளவு பன்னீர் அதாவது ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு கலக்கி கழுத்து,அக்குள்,மூட்டு,தொடை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் கருமையின் மேல் பூச வேண்டும்.

3.காலை,இரவு என்று எந்த நேரங்களிலும் இந்த ரெமிடியை பயன்படுத்தலாம்.இந்த கலவையில் உள்ள 2 பொருட்களும் வாசனை நிறைந்தவை என்பதால் கருமையை நீக்குவதோடு நல்ல மணத்தையும் கொடுக்கும்.

மேலும் ஒரு பவுலில் கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து சேர்த்து உடலில் கருமை உள்ள பகுதியில் தேய்த்து வருவதன் மூலமும் அடர் கருப்பு நீங்கும்.முகத்திற்கு மட்டும் அதிக கவனம் செலுத்தாமல் உடலில் உள்ள மற்ற பகுதிகளையும் கவனித்து வருவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.