எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
189

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த விதத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleடாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!
Next articleBreaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!!