இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?
கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் அதிகரித்தது.
இந்நிலையில் வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் காற்று சந்திப்பு நிலவு வருகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகின்றது. அதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி மண்டலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.