கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை!!

Photo of author

By Divya

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய்,அதிகப்படியான இரத்தப்போக்கு,கருத்தரித்தலில் தாமதம் போன்றவை நிகழும்.

கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருப்பவர்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அசைவப் பிரியர்கள் மாட்டிறைச்சி,சிவப்பிறைச்சி,ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்க்க வேண்டும்.இந்த அசைவ உணவுகள் கருப்பையில் நீர்க்கட்டி உருவாவதை தூண்டுகிறது.இதேபோல் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரைடு சிக்கன்,பிரெஞ்ச் பிரைஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.சர்க்கரை நிறைந்த உணவுகள்,பழச்சாறுகள்,கேக்குகள்,குக்கீஸ் போன்ற இனிப்பு பொருட்களை உட்கொண்டால் நீர்க்கட்டி பாதிப்பு அதிகரித்துவிடும்.இனிப்பு உணவுகள் கருப்பை நீர்க்கட்டி உருவாக வழிவகுக்கிறது.

கருப்பை நீர்க்கட்டி இருப்பவர்கள் மது போன்ற போதை பொருட்களை தவிர்க்க வேண்டும்.அதிக காஃபின் நிறைந்த டீ,காபி போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.காஃபின் நிறைந்த உணவுகள் கருப்பை நீர்க்கட்டியை அதிகரித்துவிடும்.உருளைக்கிழங்கு,சோளம்,பாஸ்தா போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இது கருப்பை நீர்க்கட்டி பாதிப்பை அதிகரித்துவிடும்.அதேபோல் சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.