உடல் வெப்பம் தணிய நீங்கள் குடிக்க வேண்டிய முக்கிய ஆரோக்கிய பானங்கள் இவை!!

Photo of author

By Divya

உடல் வெப்பம் தணிய நீங்கள் குடிக்க வேண்டிய முக்கிய ஆரோக்கிய பானங்கள் இவை!!

Divya

இன்று பெரும்பாலானோர் உடல் சூட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த உடல் சூடு சிலருக்கு உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் உடல் சூடு அதிகரித்து காணப்படுகிறது.

உடல் சூடு அதிகரித்தலால் வயிறு வலி,வயிறு எரிச்சல்,அம்மை நோய்,தோல் எரிச்சல்,முகப்பரு,வியர்க்குரு,சிறுநீர் கழிப்பதில் சிரமம்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த உடல் சூட்டை தணிக்க இயற்கை பானங்கள் செய்து பருகலாம்.

மாதுளை:

தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தக் கழிவுகளை அகற்றுவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

சோம்பு பானம்:

குளிர்ச்சி தன்மை நிறைந்த சோம்பு அதாவது பெருஞ்சீரகத்தை 10 கிராம் அளவிற்கு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சோம்பு பானத்தை வடிகட்டி குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

நெல்லிக்காய் பானம்:

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக பருகினால் உடல் சூடு குறையும்.நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

கற்றாழை பானம்:

காலை நேரத்தில் கற்றாழை ஜெல்லில் ஜூஸ் போட்டு குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து ஜூஸ் போட்டு குடித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

புதினா பானம்:

ஒரு கைப்பிடி புதினாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து தேன் சேர்த்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

மோர்:

பசுந்தயிரில் இருந்து மோர் எடுத்து வெந்தயப் பொடி மற்றும் கொத்தமல்லி தழை போட்டு குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

வெந்தய தண்ணீர்:

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

தர்ப்பூசணி:

தினமும் ஒரு கீற்று தர்பூசணி சாப்பிடலாம்.தர்பூசணியை ஜூஸாக அரைத்து குடிக்கலாம்.இதனால் உடல் சூடாகாமல் இருக்கும்.

வெள்ளரி ஜூஸ்:

பழுத்த வெள்ளரியை கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.முலாம் பழத்தை அரைத்து ஜூஸாக பருகினால் உடல் சூடாகாமல் இருக்கும்.