உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சிதைவதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை!!

0
63
These are the main signs that your liver health is deteriorating!!
These are the main signs that your liver health is deteriorating!!

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் உறுப்பான கல்லீரல் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இவை தேவையான நொதிகளை சரியான முறையில் சுரக்க வைக்கிறது.இந்த உறுப்பு செயலிழந்தால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தாகவிடும்.

கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் தான்.இக்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர் மிகவும் குறைவு.பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவிட்டதால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது.

தவறான உணவுப் பழக்கம்,உடல் நலப் பிரச்சனை போன்றவற்றால் கல்லீரலின் ஆரோக்கியம் சிதைவதை உணர்த்தும் சில அறிகுறிகள் இதோ.

உங்களுக்கு அடிக்கடி வாந்தி,குமட்டல் ஏற்பட்டால் அது கல்லீரல் சேதமடைவதற்கான அறிகுறிகளாகும்.

மலத்தில் இரத்தம் வெளியேறுதல்,இரத்த வாந்தி எடுத்தல் போன்றவையும் கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும்.

பசியின்மை,உடல் எடை வேகமாக குறைதல் போன்றவையும் கல்லீரல் சேதமடைவதற்கான அறிகுறிகள் ஆகும்.

தோல் அரிப்பு,பாத வீக்கம்,வயிற்று பகுதியில் வீக்கம்,வயிற்று வலி,வாயுத் தொல்லை போன்றவை அதிகளவு இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இந்த அறிகுறிகள் கல்லீரல் சேதமடைந்து வருகிறது என்பதை உணர்த்துபவை ஆகும்.

உங்களுக்கு தூக்கமின்மை இருந்தால் அலட்சியம் கொள்ளாதீர்கள்,இதுவும் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிட்டதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

Previous articleகணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்க… மாதத்தில் எத்தனை முறை தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் தெரியுமா?
Next articleஇந்த பானங்களை அருந்தினால்.. இந்த ஜென்மத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது!!