மழை மற்றும் குளிர்காலங்களில் தவிர்க்காமல் கட்டாயம் சாப்பிட வேண்டிய உண்வுகள் இவை!!

Photo of author

By Rupa

தற்பொழுது மழைக்காலம் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.இன்னும் ஒருசில மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும்.இந்த பருவ காலத்தில் அனைவருக்கும் சூடான எண்ணெயில் பொரித்த பண்டங்கள் சாப்பிட வேண்டுமென்ற ஆசை தோன்றும்.சிலருக்கு காரமான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.இது அனைவருக்கும் இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான்.ஆனால் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக குளிர் காலத்தில் நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.குறைவான வெப்பநிலை நிலவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் குளிர்காலத்தில் பலரையும் தாக்குகிறது.அதேபோல் சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில உணவுகளை சாப்பிட வேண்டும்.

பேரிச்சம் பழம்
வெதுவெதுப்பான நீர்

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் மூன்று பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை அகலும்.

வெந்தயம்

முந்தின நாள் இரவு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிட்டு வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்சனை நீங்கும்.

பசு நெய்
பசும் பால்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி பசுநெய் ஊற்றி கலந்து குடித்தால் அஜீர்ணக் கோளாறு நீங்கும்.

நெல்லிக்காய்

தினமும் மூன்று நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.

உலர் கருப்பு திராட்சை

நான்கு அல்லது கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.