இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Rupa

இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Rupa

These are the only ones to choose from! Announcement by the School Education Department!

இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து பள்ளி,கல்லூரிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்த வகுப்புகளில் 60% மாணவர்களே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படங்களை பயின்றனர்.மீதமுள்ள மாணவர்களால் பயில முடியவில்லை.

அதனால் தமிழக அரசு 9,10,11, பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.அந்தவகையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்பின் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களில் பயின்று வந்தனர்.சிறிதளவு கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 10,11 மற்றும் 12 –ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.

அப்போது தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு வந்து பாடங்களை நடத்திய ஆசிரியர்கள் மற்றும் பயின்ற மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அதனையடுத்து அதிகபடியாக கொரோனா தொற்று பரவி வருவதால் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டது.தொற்றின் காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் தேர்வு நடத்தப்படுவதில் சிக்கல்கள் நடந்துவந்தது.

நேற்று பள்ளி கல்வித்துறை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.அதில் அவர்கள்,மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆரம்பித்து 21 வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.அந்தவகையில் கொரோனா தொற்று பாதித்த மாணவர்,மாணவியர்க்கு மட்டும் தனியாக ஓர் நாளில் தேர்வு நடத்தும் படி கூறியுள்ளனர்.அதே போல நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் இருந்தால் வேறோரு பள்ளிகளில் தேர்வு நடத்தும்படியும் கூறியுள்ளனர்.