உங்கள் பெண் குழந்தை வயதுக்கு வர போகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!

Photo of author

By Rupa

பெண் பிள்ளைகளுக்கு நடக்க கூடிய மிக முக்கியமாக நிகழ்வு பூப்படைதல்.இதை பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தாங்கள் வயதுக்கு வந்துவிட்டோம் என்பதை மாதவிடாய் வைத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.ஆனால் தாங்கள் வயதுக்கு வரப் போவதை சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.இது பெண் குழந்தைகளுக்கும்,அவரது தாய்க்கும் நிச்சயம் உதவும்.

பெண் குழந்தைகள் வயதுக்கு வரபி போவதை உணர்த்தும் அறிகுறிகள்:

1)பருவமடைய போகும் பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சி ஏற்படும்.இதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

2)பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதியில் ரோமங்கள் வளரத் தொடங்கும்.இது பருவமடைய போவதற்கான அறிகுறிகள் ஆகும்.

3)சிலருக்கு முகம் மற்றும் நெற்றி பகுதியில் பருக்கள் தென்படும்.இதுவும் பருவ மடைய போகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

4)பருவம் அடையும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும்.இதை கண்டு பெண்கள் அஞ்சக் கூடாது.இது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான நிகழ்வு தான்.சில குழந்தைகள் பிறப்புறுப்பில் இரத்தம் வெளியேறுவதை கண்டு அஞ்சுவார்கள்.நோய் பாதிப்பு வந்து விட்டதாக எண்ணி தாயிடம் சொல்ல பயப்படுவார்கள்.எனவே பெண் குழந்தைகளின் தாய் பருவமடைதல் பற்றிய அறிகுறிகளை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்.மாதவிடாய் வந்தால் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தாய் தன் பெண் குழந்தைக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.