கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..!

Photo of author

By Divya

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..!

Divya

Updated on:

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..!

புதிதாக திருமணம் ஆனா பெண்கள், திருமணமாகி ஆண்டுகள் ஆனப் பெண்கள் அனைவரும் தங்கள் கணவனிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பதும்.. அவை விரைவில் நடக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வதும் வழக்கமான ஒன்று தான்.

இந்த புரிதல் இல்லாமல் போவதால் தான் பல தம்பதிகள் சண்டையிட்டு கொள்கின்றனர். மனைவி என்பவள் தன் கணவன் தன்னை சில விஷயங்களில் பாராட்ட வேண்டும்… தனக்கு ஆதரவாக பேச வேண்டும்… தனது கருத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்… என்று பல விஷயங்களில் எதிர்பார்ப்பாள்.

அவ்வாறு ஒரு மனைவி கனவிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்கள்…

கணவன் தனக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.. தன்னிடம் ஒரு தோழன் போல் இருக்க வேண்டுமாம் என்று திருமணம் ஆன பெண்கள் பலர் விரும்புகின்றனர்.

தான் சமைக்கும் உணவை நன்றாக உள்ளது என்று கணவர் பாராட்ட வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாள்.

ஒரு செயலை கணவன் செய்கிறார் என்றால்.. அதை பற்றி தன்னிடம் கருத்து கேட்க வேண்டும் என்று நினைப்பாள். மனைவி கருத்திற்கு ஆதரவு தார வேண்டும்.

கணவன் வெளியில் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைப்பாள்.

வேலை செய்துவிட்டு வரும் கணவனுக்கு அன்றைய தினம் எப்படி இருந்தது என்பதை கேட்டறிந்து கொள்ள ஆசைக் கொள்வார்.

கணவன் அவரது அம்மா மீது வைத்துள்ள பாசத்தை தன்னிடமும் காட்ட வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பார்.

வெளியில் செல்லும் பொழுது மனைவியிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.