உங்கள் கிட்னி ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட இந்த கெட்ட பழக்கங்களே காரணம்!!

0
9

இன்று சிறுநீரகக் கோளாறால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் அதை கவனிக்காமல் விட்டால் கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட முதல் காரணம் நாம் போதிய அளவு தண்ணீர் பருகாமைதான்.அதேபோல் சில நோய்களாலும் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.நமது சிறுநீரகம் செயலிழக்க என்ன காரணம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணங்கள்:

1)அதிக உப்பு உணவுகள்
2)உடல் பருமன்
3)இரத்த அழுத்தம்
5)சர்க்கரை நோய்
6)நீர்ச்சத்து குறைபாடு
7)மோசமான உணவுப் பழக்கம்

நாம் சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டே இருந்தால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரக ஆரோக்கியம் மோசமாக்கிவிடும்.சமச்சீரற்ற உணவுப் பழக்கம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

சிறுநீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.உலர் விதைகள்,பால் மற்றும் பால் பொருட்கள்,முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

சிறுநீரகத்தில் குவிந்த அழுக்குகளை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)ரணகள்ளி இலை
2)தண்ணீர்

இரண்டு அல்லது மூன்று ரணகள்ளி இலைகளை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த ரணகள்ளி பானத்தை வடித்து பருகி வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

Previous articleகுளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை இந்த பொருட்களுடன் தப்பி தவறியும் சாப்பிட்டுவிடாதீர்!!
Next articleதமிழக அரசு வேலை!! 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!!