உடலில் தோன்றும் இந்த மாற்றங்கள் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமாம்! இதை ஒரே நாளில் சரி செய்வது எப்படி?
சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.அதிகளவு நீர் அருந்தினாலும் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்கும்.இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.தொடர்ந்து சிறுநீர் கழித்தால் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் வறட்சி,சோர்வு ஏற்படும்.
இந்த பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)நாவல் விதை
2)தேன்
செய்முறை:-
100 கிராம் என்ற அளவில் நாவல் விதை வாங்கி நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.நாவல் விதை இல்லாதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய நாவல் பொடி 100 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.
பிறகு நாவல் பொடி பானம் செய்ய ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.அதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி நாவல் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை சரியாகும்.
மற்றொரு தீர்வு:-
1)பூண்டு
2)தேன்
செய்முறை:-
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சரி செய்ய பூண்டு உதவுகிறது.பூண்டை சுட்டு சாப்பிடலாம் அல்லது பச்சையாக சாப்பிடலாம்.இவ்வாறு பூண்டு சாப்பிட பிடிக்காதவர்கள் பூண்டு தேநீர் செய்து அருந்தி வரலாம்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பல் பூண்டை இடித்து சேர்க்கவும்.
பின்னர் இதை இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த தேநீரை ஒரு கிளாஸிற்கு வடித்து தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தி வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.