இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!!

0
233

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி நிலவி வந்த நிலையில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணித்த வேளையில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க பகுதிகளில் நாகையில் இருந்து சுமார் 600கி.மீ தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

வடக்கு-வடமேற்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து, பிறகு அடுத்த 48  மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் இலங்கை வழியே குமரிகடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது. இதனால் நேற்று முதல் 24-12-2022 தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்காலின் சில பகுதிகளிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதேபோல 25-12-2022 அன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுகோட்டை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கன மழையும் பெய்ய கூடும்.

26-12-2022 அன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவையின் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழையும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம்,தேனி, தென்காசி,விருதுநகர், புதுகோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கன மழை தமிழகத்தில் பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Previous articleஎம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!
Next articleஐபில் மினி ஏலம்!! அதிக விலை போகும் வெளிநாட்டு வீரர்கள்!!