தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்!

0
199

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்!

கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இன்று (பிப்ரவரி17) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை (பிப்ரவரி18) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாளில், தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அதனை தொடர்ந்து திங்கட்கிழமை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதில், மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் தெரிவிக்கப்படவில்லை.

Previous articleமுக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி!
Next articleஇந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here