இந்த மருந்துகள் போலியானது!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் பல மருந்துகள் தரமற்று இருப்பதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது .
மேலும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பல நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு நடத்தியது. அதனையடுத்து ஆய்வு முடிவுகளில் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தரமற்றவைகள் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மருந்துகளின் நிறுவனங்கள் பெரும்பாலும் பஞ்சாப், தெலுங்கானா , ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளது. தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகள் முதலில் மத்திய- மாநில மருந்து கட்டுபாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அதன்பின் அந்த மருந்துகள் விற்பனைக்கு சான்றிதாழ்கள் வழங்கபடும்.
இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் 1302 மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு . அந்த ஆய்வு முடிவில் 27 மருந்துகள் தரமற்று இருப்பதாகவும், 1 மருந்து போலியானது எனவும் தெரியவந்துள்ளது.
அந்த மருந்துகள் காய்ச்சல், இருப்புச்சத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவைகளின் மருந்துகள் என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவில் வெளிவந்த தரமற்ற மருந்துகளின் நிறுவனகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.இந்த தகவலை பற்றி மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியமானது இணையப் பக்கத்தில் வெளிட்டுள்ளது.