பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!! 

0
101
Important information released to the public!! Important notification of the Corporation for complaints related to rain damage!!
Important information released to the public!! Important notification of the Corporation for complaints related to rain damage!!

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!! 

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் மரங்கள் மின்கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரம்பூர், பட்டாளம், புளியந்தோப்பு,  கிண்டி கத்திப்பாரா, வேப்பேரி, கோயம்பேடு, ஓ.எம்.ஆர் திருமங்கலம்,தரமணி, உன் பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து செல்கிறது. ஒரு நாள் பெய்த இந்த மழைக்கே சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று அதனை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 44 இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் 163 பகுதிகளில் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழையினால் பல பகுதிகளில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் விளக்குகளை பயன்படுத்தியே செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் சென்னையில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி 1913 என்ற எண்ணை தெரிவித்துள்ளது.

மேலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் தொடர்பான புகார்களுக்கு 044 4567 4567, என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அடுத்ததாக குடிநீர் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 ஐயும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்ததாக மிகவும் முக்கிய அறிவிப்பாக கனமழை பெய்து வரும் இந்த சமயத்தில் மரங்கள், மின் கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் இருக்க வேண்டாம். இதுவரை மழையினால் பெரிய பாதிப்பு எதுவும் நிகழவில்லை. இருப்பினும் தாழ்வான பகுதிகளை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.