மருத்துவ நிபுணர்கள் தினமும் உலர் விதைகள் உட்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர்.கால்சியம்,புரதம்,பொட்டாசியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் என்று உலர் விதைகளில் இல்லாத ஊட்டசத்துக்களே இல்லை என்று சொல்லலாம்.
பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா,வேர்க்கடலை,பூசணி விதை,சூரிய காந்தி விதைகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த உலர் விதைகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறம் மேம்படும்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.பாதாமில் இருக்கின்ற கால்சியம் எலும்பை வலிமையாக்குகிறது.
முந்திரி பருப்பில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.முந்திரி சாப்பிடுவதால் உடல் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.இதய ஆரோக்கியம் மேம்பட முந்திரி சாப்பிடலாம்.
கால்சியம்,புரதம்,ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள வால்நட்டை சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வால்நட் சாப்பிடலாம்.
வேர்க்கடையில் கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,இரும்பு,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.வேர்க்கடலையை வறுத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பிஸ்தாவை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
நார்ச்சத்து,மெக்னீசியம்,ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.முடி வளர்ச்சி அதிகரிக்க பூசணி விதையை சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.சருமப் பிரச்சனைகள் மற்றும் முடி உதிர்வு பாதிப்புகள் குணமாகும்.