இந்த ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த மாதம் பல பண்டிகைகள் வருவதால் விடுமுறைகள் தொடர்ச்சியாக இருந்த வண்ணமாகத்தான் உள்ளது.அதுமட்டுமின்றி தேசிய விடுமுறைகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதனால் வங்கிகளும் இந்த விடுமுறை நாட்களில் இயங்காது.மக்கள் வங்கிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் அதை முன்கூட்டியே முடித்துக் கொள்வது நல்லது. தேசிய விடுமுறையை தவிர்த்து இதர விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இரண்டாவது வாரத்தில் பல மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
ஆகஸ்ட் 12 ,13 ,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கான்பூர் மற்றும் லக்னோவில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது அதனால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை. 13 ,14, 15 ஆகிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தின விழா என அடுத்தடுத்து வருவதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளனர். வரும் பதினாறாம் தேதி பாரிஸ் நியூ இயர் மும்பையில் கொண்டாடப்படுகிறது.அதற்கடுத்தப்படியாக 19ஆம் தேதி ஜென்மாஷ்டமி அதாவது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சென்னை ,ஜெய்ப்பூர் ,ஜம்மு போன்ற பகுதிகளில் வங்கிகளுக்கு விடுப்பு. ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது.அன்றும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.இந்த விடுமுறை நாட்களை தவிர்த்து மக்கள் இதர நாட்களில் தனகுளின் தேவைகளை முடித்துக்கொள்ளலாம்.