தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

Photo of author

By Divya

தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

Divya

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தயிரில் உள்ள புரோபயாட்டிக் என்ற உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.

தயிர் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் உடல் சூடு பிரச்சனை,அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடுகின்றனர்.தயிரால் நமக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்றாலும் இதை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிடுகிறது.அப்படி தயிருடன் எந்த உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமற்றதாக மாறும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தயிருக்கு சிட்ரஸ் பழங்களுக்கும் ஆகவே ஆகாது.ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை தயிர் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் திராட்சை பழத்துடன் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தயிருடன் காரமான உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது.இப்படி சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை ஏற்படும்.தயிர் மற்றும் மீன் உணவுகளை ஒருபோதும் சேர்த்து சாப்பிடக் கூடாது.இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை,வயிறு பிரச்சனை அதிகமாக ஏற்படும்.

தயிருடன் பால் மற்றும் இதர பால் பொருட்கள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஊறுகாய் மற்றும் சோயா போன்ற உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.தயிருடன் புளித்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

தயிரில் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவை இரண்டும் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் ஒன்றாக சாப்பிடும் பொழுது சைன்ஸ்,ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தயிருடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.தயிருடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.தயிருடன் தக்காளி,பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.

தயிருடன் கீரை உணவுகளை உட்கொண்டால் வயிறு ஆரோக்கியம் மோசமாகும்.கத்தரிக்காய் மற்றும் தயிர் உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.