இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Rupa

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மதுரை மாவட்டத்தில் ராக்காயி அம்மன் என்ற கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த நிருபர்களிடம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததை அடுத்து பல கோவில்கள் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கிட்டத்தட்ட 114 கோவில்களில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் காணாமல் போன சிலைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் திமுக ஆட்சி வந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 10 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல அறநிலையத்துறையில் பணி புரிவதற்காக பலர் அவருக்கு உரிதான சான்றிதழ் இன்றி போலிச் சான்றிதழை கொடுத்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வருகிறது.

அவ்வாறு வரும் புகார்கள் ஆதாரத்தோடு நிரூபிக்கப்படுமாயின் அந்த ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு திருக்கோவிலிலும் பக்தர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் திருக்கோவிலுக்கு வர வேண்டிய வாடகை பாக்கி ஏதும் வசூலிக்க படாமல் நிலுவையில் இருந்த நிலையில், தற்பொழுது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் திருக்கோவில்களுக்கு தரவேண்டிய 260 கோடி ரூபாய் வாடகை பாக்கியானது வசூலிக்கப்பட்டுள்ளது.