பீரியட்ஸ் பெயின் நிற்க இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்!! சட்டுன்னு செய்து பட்டுனு வலியை விரட்டுங்கள்!!

Photo of author

By Vijay

மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு,உடல் சோர்வு,வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.இதில் வயிற்றுவலி சிலருக்கு ஒவ்வொரு மாதவிடாய் நேரத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த மாதவிடாய் வயிற்றுவலியில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
1)நல்லெண்ணெய்
2)வெந்தயம்
பயன்படுத்தும் முறை:
முத்தலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.
பிறகு இந்த எண்ணையை ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு வடித்துக் கொள்ளுங்கள்.இந்த எண்ணெயை வயிற்றின் மீது ஊற்றி மசாஜ் செய்து மாதவிடாய் வலி குறையும்.
தேவையான பொருட்கள்:
1)வெந்தயம்
2)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் 10 கிராம் வெந்தயம் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதை ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்துவிட்டு வெந்தயத்தை மென்று சாப்பிட்டால் மாதவிடாய் வயிறு வலி நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1)இஞ்சி
2)தேன்
3)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு சிறிய இஞ்சி துண்டை எடுத்து தோல் நீக்கி உரலில் போட்டு தட்டிக் கொள்ளுங்கள்.இதை சூடாகி கொண்டிருக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)பெருஞ்சீரகம்
2)தேன்
3)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.