மருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!!
இந்த காலத்தில் நிறைய பேர் மரு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் நூலில் 90 சதவிகிதம் நபர்களுக்கு இந்த மறு பிரச்சனை இருக்கிறது. இந்த மருவினால் எந்த ஒரு வலியோ பாதிப்போ இல்லை என்றாலும் நம்முடைய முக அழகையே இது மிகவும் குறைத்து காட்டுகிறது.
மருக்கள் கழுத்தில் மட்டுமல்லாமல் கை கால்களில் மற்றும் கழுத்துகளில் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்று இரு பாலருக்கும் ஏற்படுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டுமே அதிகமாக ஏற்படுகிறது.
இந்த மருவை சரி செய்வதற்காக சிலர் மருவில் நெருப்பு வைக்கிறார்கள் அல்லது அதை கட் செய்து எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அது சில காலத்திற்கு மட்டுமே வராமல் இருக்கும் நிரந்தரமாக சரி செய்ய முடியாது.
மரு என்பது வைரல் இன்பெக்ஷனால் உருவாகக்கூடியது இது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவக்கூடியது மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
எனவே மருவை இயற்கையாக நீக்கக்கூடிய ஒரு ஈஸியான வழிமுறையை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு
எலுமிச்சை சாறு
பேக்கிங் சோடா
செய்முறை:
1. ஆறிலிருந்து ஏழு பல் பூண்டை தோல் நீக்கி நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
2. இடித்த இந்த பூண்டிலிருந்து சாரை மட்டும் தனியாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. இந்த சாரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. அடுத்து இதனுடன் ஒரு பின்ச் அளவு பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பூண்டின் சாறு எலுமிச்சை சாறு பேக்கிங் சோடா என அனைத்தையும் நன்றாக கலந்து அதை மரு இருக்கும் இடத்தில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவி விடலாம்.
இதை இரவு தூங்குவதற்கு முன்பு செய்தால் மிகுந்த ஆற்றல் அளிக்கும். இரவு நேரமில்லை என்று கூறுபவர்கள் மறுநாள் காலையில் செய்து வரலாம். இதை 5 லிருந்து 6 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வர மரு தானாகவே நிரந்தரமாக உதிர்ந்து விடும்.