இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!!
பிசிசிஐ –யின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பல்வேறு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தற்போது அவருடைய விருப்பத்தை கூறி உள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியதாவது, ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் செல்லும் என்று கூறுவது கடினம். ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முதலிய அணிகள் கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும்.
நியூசிலாந்து அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்ற ஒரு அணியாகும். இதனுடன் பாகிஸ்தானையும் சேர்த்து சொல்கிறேன் ஏனென்றால் பாகிஸ்தானும் அரையிறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு சென்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ஆர்வமாக இருப்பதாக கூறி உள்ளார்.
இந்த போட்டியில் இந்திய வீரர்களுக்கு மிகவும் அழுத்தம் ஏற்படும். ஆனால் அவர்கள் கண்டிப்பாக சமாளித்து வருவார்கள். விளையாட்டில் அனைவருக்குமே அழுத்தம் காணப்படும்.
ஆனால் இந்த முறை அது ஒரு பிரச்சனையாக இருக்கும் எனவும், சில சமயம் சரியாக திட்டமிட்டு செயல்படாததால் இந்திய அணி முக்கியமான சமயங்களில் சரியாக விளையாட முடிவதில்லை.
ஆனால் இந்த ஒருநாள் உலகக்கோப்பையில் கண்டிப்பாக சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கங்குலி கூறியுள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
இது அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.