இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

Photo of author

By Parthipan K

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

ஒடிஸா மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாதம் (பிப்ரவரி) 16ஆம் தேதியில் தொடங்கி 24ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண்ணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் வருகிற 16ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக, அரசு ஊழியர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், அவர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் உயர்நிலை அமைப்புகள் போன்றவற்றின் ஊழியர்கள், தங்களது ஜனநாயக கடமையை அற்ற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குபதிவுக்கு முந்தைய நாள், வாக்குபதிவு நடைபெறும் நாள் மற்றும் வாக்குபதிவுக்கு அடுத்த நாள் என மொத்தம் மூன்று நாள் விடுமுறை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாத வகையில், அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்களுக்கு மிகாமல் விடுமுறை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.