பிப்ரவரி 14 பொது விடுமுறை!

0
88

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தொடங்கும் வாக்குபதிவு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களை பொறுத்தவரை பிப்ரவரி 14 ஆன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

40 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் கோவா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 14ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து கோவா மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நாளன்று அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 அன்று பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K