இன்று பெரும்பாலானோர் அதிக இரசாயனம் மற்றும் வாசனை நிறைந்த ஷாம்பு,எண்ணெய்களை பயன்படுத்தி முடி ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.கெமிக்கல் பொருட்களை தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் முடியை கருமையாக்கும் வழிகள் சொல்லப்பட்டுள்ளது.
தேவைப்படும் பொருட்கள்:-
1)கடுகு – 2 தேக்கரண்டி
2)வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி
3)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி கடுகு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு கொட்டி ஆறவிடவும்.அடுத்து அதில் 1 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு வறுத்து கடுகுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும்.
பிறகு மிக்சர் ஜாரில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த எண்ணெயை ஆறவிட்டு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி அடர் கருமையாக மாறும்.
மற்றொரு தீர்வு:-
தேவைப்படும் பொருட்கள்:-
1)பூந்திக்கொட்டை – ஒரு கப்
2)பெரிய நெல்லிக்காய் வற்றல் – ஒரு கப்
3)சீகைக்காய் – ஒரு கப்
4)கரிசலாங்கண்ணி – 100 கிராம்
5)சாதம் வடித்த கஞ்சி – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் பூந்திக் கொட்டை,நெல்லிக்காய் வற்றல்,சீகைக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகியவற்றை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கப்பில் வடித்து ஆறவைத்த கஞ்சியை ஊற்றி அரைத்த ஹேர் பேக் 50 கிராம் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 6 மாதங்களுக்கு செய்து வந்தால் தலைமுடி கருகருன்னு அடர்த்தியாக வளரும்.