கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

Photo of author

By Divya

கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

Divya

நாம் பார்க்க உதவும் கண்கள் நமது உடலின் மிக முக்கிய உறுப்பாகும்.நம் கண் பார்வை திறனை மேம்படுத்த ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளலாம்.அதேபோல் கண் பயிற்சி செய்து கண் பார்வை திறனை மேம்படுத்தலாம்.

கண் பார்வை திறனை அதிகப்படுத்தும் உணவுகள்:

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.கேரட்,பாதாம் பருப்பு,மாம்பழம்,பப்பாளி பழம் போன்றவை வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளாகும்.இந்த உணவுகளை உட்கொண்டால் கண் பார்வை திறன் மேம்படும்.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.

ஆரஞ்சு பழம்,எலுமிச்சை,தக்காளி போன்றவற்றை சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த கொழுப்பு அமிலம் உணவுகளை உட்கொண்டால் கண் பார்வை திறன் மேம்படும்.வைட்டமின் ஈ உணவுகள் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

கண் பயிற்சி செய்து வந்தால் பார்வை திறன் மேம்படும்.உள்ளங்கை கொண்டு கண்களை பொத்தி பார்க்க வேண்டும்.இப்படி செய்தால் கண் பார்வை திறன் மேம்படும்.தலை அசைக்காமல் கண்களால் எட்டு போட்டு பார்க்க வேண்டும்.இப்படி செய்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

கண் பார்வை திறன் அதிகரிக்க பானம்

1)கேரட்
2)தண்ணீர்
3)தேன்

ஒரு முழு கேரட் எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குடித்தால் கண் பார்வை திறன் மேம்படும்.

1)பாதாம் பருப்பு
2)தேன்

20 கிராம் பாதாம் பருப்பை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.