30 நிமிடங்களில் இன்சுலின் உடனடியாக சுரக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!!

Photo of author

By CineDesk

30 நிமிடங்களில் இன்சுலின் உடனடியாக சுரக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!!

நம் உடம்பில் கணையத்தில் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோனை தான் இன்சுலின் என்று கூறுவோம். இந்த ஹார்மோன் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் போனாலோ செல்களுக்குள் சர்க்கரை அதாவது குளுக்கோஸ் செல்ல முடியாது. இந்தச் சர்க்கரை ரத்தத்திலேயே அதிக அளவு தங்கிவிடும். இதனாலேயே பல பேருக்கு இந்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

இந்த நோயால் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்வார்கள். இந்த இன்சுலின் ஊசி போடுவதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல ஆரம்பிக்கும். இதனால் தற்சமயம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே இன்சுலின் ஊசி போடாமல் 30 நிமிடங்களிலேயே இன்சுலினை சுரக்க வைக்க கூடிய ஒரு அற்புதமான வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவ குறிப்பை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
வெல்லம்

செய்முறை:
முதலில் எட்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த வெங்காயத்தில் ஒரு தேக்கரண்டி இருந்து இரண்டு தேக்கரண்டி வரை வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெல்லம் பயன்படுத்தலாம் ஆனால் வெள்ளை சர்க்கரை தான் பயன்படுத்தக் கூடாது. இதைத் தவிர்த்து கருப்பட்டி நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

இப்போது இந்த சின்ன வெங்காயத்தையும் வெல்லத்தையும் நன்கு கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு அல்லது உணவு சாப்பிடுவதற்கு பின்பு இதை அப்படியே சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சின்ன வெங்காயம் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவது பிடிக்காதவர்கள் வெறும் சின்ன வெங்காயத்தை மட்டும் உணவு சாப்பிடும் போது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இதே போல சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மிகச் சிறந்த உணவு என்றால் அது பழைய சோறு தான். பழைய சோறுக்கு இந்த சின்ன வெங்காயத்தை கடித்துக் கொண்டு சாப்பிட்டால் அது உடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் இது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இன்சுலினை அதிகமாக சுரக்க வைக்கும். உணவில் ஏதேனும் நச்சுக்கள் இருந்தாலும் இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் நச்சுக்கள் வெளியேறிவிடும்.

இந்த சின்ன வெங்காயம் ஆனது ரத்தத்தில் இருக்கக்கூடிய உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைக்கும். ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி ரத்த ஓட்டத்தை சீராக்கும். நம் உடம்பில் உப்பு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு, மூட்டு தேய்மானம், மூட்டு வலி, இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். ஆனால் இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர இந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

இன்சுலினை வெறும் 30 நிமிடங்களில் இது சுரக்க வைக்கும். உடம்பில் சர்க்கரை அதிகமாக இருக்கும் போது உடல் சோர்வு தலைவலி பாத வலி பாத எரிச்சல் நாவறட்சி அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை சாப்பிட்ட 30 நிமிடங்களில் இன்சுலினை சுரக்க வைத்து உடல் சோர்வை நீக்கி உடலுக்கு ஒரு தனி சக்தியை கொடுக்கும். பத்து நாட்களுக்கு இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு நிச்சயமாக கட்டுக்குள் வரும்.