இந்த ராசி அன்பர்களே வெளியூர் பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசி அன்பர்களே வெளியூர் பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாள் அல்ல.முக்கிய முடிவுகள் எடுப்பது தவிர்க்கலாம்.வேலை செய்யும் அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பணியை விரைவில் முடிக்க முடியும்.இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பேசும் பேச்சில் அதிக கவனம் தேவை. கடவுள் வழிபாட்டால் நிம்மதி அடைவீர். வேலை செய்யும் அலுவலகத்தில் அதிக பணிச்சுமை காணப்படும். மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இன்று பயணத்தின்போது பண இழப்புகள் ஏற்படலாம்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் புதிதாக பலவற்றை கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு சவாலான நாளாகவே இருக்கும். வேலை செய்யும் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் கெட்ட பெயர் உண்டாகும். உங்கள் துணையிடம் தேவையற்ற வாக்குவாதம் நடைபெறும். செலவுகள் அதிகமாக காணப்படுவதால் கடன் வாங்க நேரிடும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நான் நாளாக அமையும். நீண்டநாள் நினைத்துக்கொண்டிருந்த காரியம் கைகூடும் சுபகாரியமான நாள். வேலை செய்யும் அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர். பணவரவுகள் இன்று சுமுகமாக இருக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் வெற்றியை காணும் நாள். உங்கள் கடின உழைப்பால் வெற்றியடைவீர்கள். கடினமான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று லாபகரமான நன்னாள்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களின் முயற்சிகள் மூலம் சவால்களை வெல்வீர்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் புத்துணர்ச்சியுடன் பணியாற்றுவதன் மூலம் பணிகளை சிறப்பாக முடிக்க முடியும். உங்கள் துணையுடன் உரையாடும் பொழுது அதிக கவனம் தேவை. இன்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் பூர்வீக சொத்துக்களால் பலன் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே நீங்கள் எதிர்பார்த்த கொண்ட காரியம் இன்று நடப்பது சாத்தியமற்றது. முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் அலுவலகத்தில் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிக்க முடியாது. உங்கள் துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். சில ஏமாற்றங்கள் நடைபெறும். வேலை செய்யும் அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். சக பணியாளர்களால் தேவையற்ற சங்கடங்கள் நடைபெறும் அதனால் வேலையில் முழுமை அடைய முடியாது. இன்று பணம் வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகச் சிறந்த நாள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை சந்திக்கும். உங்கள் சுய முன்னேற்றத்தால் வளர்ச்சி அடைவீர். புதிய வேலைகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாள். பொறுமையைக் கடைப்பிடித்தால் பல நன்மைகள் உண்டாகும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க அதிகளவு உழைக்கவேண்டும். உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர். பணவரவுகள் சீராக இருக்காது. உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே உங்கள் கனவு லட்சியங்களை அடைய பலவற்றை விட்டுக் கொடுக்க நேரிடும். முடிவுகள் எடுப்பதற்கான சிறப்பான நாள் இன்று இல்லை. ஒரு பணி செய்வதற்கு முன் திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம். இன்று நீங்கள் உங்கள் துணையிடம் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும். குடும்பம் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அனுகூலமான நன்நாள். அதிக தன்னம்பிக்கையுடன் இன்று காணப்படுவார். வேலை செய்யும் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். மிகவும் சிறப்பான நாளாக இன்று உங்களுக்கு காணப்படும்.