மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்!

0
70
People! Do this to escape from omega!
People! Do this to escape from omega!

மக்களே! ஒமைக்ரானிடமிருந்து தப்பிக்க கட்டாயம் இதை செய்யுங்கள்!

கொரோனா  தொற்றானது 2019ஆம் ஆண்டு அடுத்து அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கமும் இன்றுவரை அளவிட முடியாது என்று கூறலாம். இந்தத் தொற்று ஆல்பா, பீட்டா,டெல்டா என தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் பரிமாற்றம் வளர்ச்சி அடைந்து ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது.

இத்தொற்று டெல்டா பிளஸ் கொரோனா வகையை காட்டிலும் அதிக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.இந்த தொற்றும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் ஊடுருவி வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த தொற்றுகளிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வழிமுறைகளை கூறியுள்ளனர். அவற்றில் முதலாவதாக அடிக்கடி கைகளை சனிடைசர் கொண்டு சுத்தம் படுத்துவது அல்லது கைகளை அலம்புவது.

அதற்கு அடுத்தபடியாக பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 6 மீட்டர் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவற்றைக் காட்டிலும் ஒவ்வொருவரும் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.அதற்கேற்றவாறு உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். வகையில் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் ஈ ஜிங்க் வைட்டமின் டி மற்றும் புரதம் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

அவ்வாறான உணவுகளை உண்பது அதிக பலனை அளிக்கும். உணவு பழக்கம் மட்டுமின்றி தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நன்று. அதைப்போல மக்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி வீட்டை விட்டு வெளியேறும் பொழுது கட்டாயம் முகம் கவசம் அணிந்து செல்வதை வழக்கமாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றும் வகையில் ஒமைக்ரானிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.