இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

Photo of author

By Rupa

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

மேஷம்:
மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். இன்று நீங்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். அப்பிரச்சனையை தவிர்க்க ஒரு நிலையுடன் வேலையை செய்ய முயற்சியுங்கள்.உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.அதிக தனலாபம் கிட்டும் நாள்.
ரிஷபம்:
ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளை பல முறை யோசித்து மிகவும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்.நீங்கள் செய்யும் பணிகளில் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.உங்கள் இல்லற வாழ்க்கையில் தேவையற்ற மன கசப்புகள் உண்டாகும்.இன்று உங்களது பணம் வரவு சற்று குறைந்து காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையாது. எந்தவித முடிவுகளையும் ஒரு நாள் தள்ளிப் போடுவது நல்லது.உங்கள் அலுவலக பணியில் சிறு தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.அதனால் எந்த காரியத்தையும் செய்வதற்கு முன் இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். இன்று பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.பண இழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
கடகம்:
கடகம் ராசி அன்பர்களே உங்களின் கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.உங்களது இல்லத்தில் சில மனக் கசப்புகள் உண்டாகும். உங்களுக்கும் பொறுப்பு சுமை அதிகமாகவே காணப்படும்.மருத்துவம் சார்ந்த செலவுகள் சற்று இந்நாளில் அதிகமாக காணப்படும்.
சிம்மம்:
சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்னாள். நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும். இன்று உங்களது முக்கிய முடிவுகளை எடுக்க சரியான நாள்.வேலை செய்யும் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.பண வரவுகள் கிட்டவும் வாய்ப்புகள் உள்ளது.உங்களது ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
கன்னி:
கன்னி ராசி அன்பர்களே உங்களது கடின உழைப்பு உங்களை முன்நோக்கி செல்ல உதவும்.வேலை செய்யும் அலுவலகத்தில் திட்டமிட்டு பணியை முடிப்பதன் மூலம் நல்ல பெயர் கிட்டும்.உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் காணப்படும். உங்களது கடின உழைப்புக்கான சலுகைகளும் கிடைக்கும்.இன்று உங்களது ஆரோக்கியமும் சிறப்புடன் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் சாந்தமாக இருக்குமாயின் வெற்றியை அடைய முடியும்.உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.அதேபோல அலுவலக பணி சுமையும் சற்று அதிகமாகவே காணப்படும்.அதனை திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரைந்து முடிப்பீர்கள்.உங்கள் இல்லற வாழ்வில் சற்று மனக்கசப்புகள் ஏற்படும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும்.உங்கள் பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
விருச்சகம்:
விருச்சகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நாள் நன்றாக அமையும்.அதிக முயற்சி செய்து வெற்றி பெறும் நாளாக இன்று இருக்கும்.உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் சற்று தாமதிக்க நேரிடும்.உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் காணப்படும். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.அவர்களின் மருத்துவ செலவு சிறிதளவு ஏற்படக்கூடும்.உங்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தனுசு:
தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்கள் நாளை நன்னாள் ஆக மாற்றலாம்.இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிப்பீர்கள்.அதனால் உயரதிகாரிகளிடம் பாராட்டுகளையும் பெறுவீர்.உங்கள் இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.பணவரவுகளும் சிறப்பாக இருக்கும்.உங்கள் ஆரோக்கியம் இன்று சிறந்து விளங்கும்.
மகரம்:
மகரம் ராசி அன்பர்களே நீங்கள் இன்று நேர்மையாக செயல்பட்டால் உங்களது நாள் நன்றாக அமையும்.உங்கள் அலுவலகத்தில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.உங்கள் இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையும்.அதேபோல உங்களின் தன லாபமும் அதிகளவு கிட்டும். உங்களது உடல்நிலை முன்பை விட தற்பொழுது சிறந்து காணப்படும்.
கும்பம்:
கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் ஒரு நிலையான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.அதனால் உங்களது வேலைகள் நிறைவேற்றுவது சுலபமாக இருக்கும்.உங்கள் அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.அதனை திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரைந்து முடிப்பீர்கள்.உங்களது இல்லற வாழ்க்கையில் சில கஷ்டங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு அதிகமாக காணப்படும்.மேலும் உங்களது பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.சிறிய பிரச்சனை ஏற்படும் பொழுது அதை கவனிக்குமாயின் அடுத்த கட்ட பிரச்சனையில் இருந்து அவர்களை காப்பாற்றி கொள்ள முடியும்.
மீனம்:
மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் அனைவரிடமும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பல இழப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் முழு உழைப்பையும் கொண்டு செயல்படுவீர்கள்.அதனால் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.தேவையற்ற காரணங்களால் உங்கள் துணையிடம் சில மனக்கசப்புகள் உண்டாகும்.உங்கள் இல்லம் சம்பந்தமான தேவைகளுக்கு பணத்தை செலவிட நேரிடும்.