Varicose veins: உடலில் நரம்பு சுருட்டல் பிரச்சனை இருந்தால் அதை வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம்.நமது சருமத்தின் மேல் பகுதியில் நரம்புகள் புடைத்து காணப்படும்.நீண்ட நேரம் நிற்பது அல்லது நீண்ட நேரம் நடத்தல் போன்ற காரணத்தால் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு இந்த பாதிபபு உண்டாகிறது.
இந்த வெரிகோஸ் வெயின் பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.இரத்த நாளங்களில் காணப்படும் வால்வுவில் பிரச்சனை ஏற்பட்டால் இரத்தம் தேங்கி அழுத்தம் அதிகரிக்கும்.இதன் காரணமாக வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஏற்படும்.
வெரிகோஸ் வெயின் உருவாக காரணங்கள்:
*இரத்த நாளங்களின் வால்வுகளில் பிரச்சனை
*கர்ப்ப காலம்
*மாதவிடாய் சுழற்சி
*உடல் பருமன்
*நீரிழிவு நோய்
*ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
*நீண்ட நேரம் நடத்தல்
*நீண்ட நேரம் நிற்பது
*அதிகப்படியான காபி பருகுதல்
*தசை பிடிப்பு
வெரிகோஸ் வெயின் ஆரம்ப அறிகுறிகள்:
1)நரம்புகள் வீக்கம்
2)அடிக்கடி கால் வலி
3)கணுக்கால் வீக்கம்
4)கால்களில் வீக்கம்
5)நரம்புகள் துடித்தல்
6)சுருள் நரம்பு சுற்றி அரிப்பு
7)சரும நிறத்தின் மாற்றம்
யாருக்கு வெரிகோஸ் வெயின் வர வாய்ப்பிருக்கிறது?
வயது முதிர்வு:
நமக்கு வயதாகும் பொழுது இரத்த ஓட்டத்தின் வேகம் குறையத் தொடங்கும்.இப்படி ஆனால் நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்படும்.
வேலைப்பளு:
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,நீண்ட நேரம் கால்களை தொங்கவிட்ட படி இருத்தல் போன்ற காரணங்களால் வெரிகோஸ் வெயின் ஏற்படலாம்.
சர்க்கரை:
உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறும் போது வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படும்.
நரம்பு பிரச்சனை:
உடல் நரம்புகளில் அடிபடுதல்,காயம் போன்ற காரணங்களால் வெரிகோஸ் வெயின் ஏற்படலாம்.
வெரிகோஸ் வெயினை தடுக்க வழிகள்:
1)நீண்ட நேரம் கால்களை தொங்கவிட்டபடி இருப்பதை தவிர்க்க வேண்டும்.உறங்கும் போது கால்களை உயர்த்தி வைக்க வேண்டும்.
2)ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இடுப்பிற்கு கீழ் அணியும் ஆடை இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3)தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.நடைபயிற்சி செய்தல்,வேலை நேரத்தில் அடிக்கடி கால்களுக்கு ஓய்வு கொடுத்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் வெரிகோஸ் வெயினில் இருந்து தப்பிக்கலாம்.