இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடு களபப்பணித்து செல்பவருக்கு பொருந்தாது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததால் தான் இவ்வாறானா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.மேலும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகை பதிவேடு கட்டயமாக்கபட்டுள்ளது.இதன் மூலம் அந்த பணியில் நடக்க கூடிய ஊழல் அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பஞ்சாப்பில் அதிகளவு பனி பொழிந்து வருகின்றது.அதனால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. கடும் குளிரின் காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி ஒன்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் தான் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.