நாடாளுமன்ற சபாநாயகர் பிரச்சனைகளை காது கொடுத்தும் கேட்காமல் உடைகளில் மட்டுமே குற்றம் சாட்டுவதாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் கொந்தளித்திருக்கிறார்.
திமுக அரசானது நீண்ட நாளாக தொகுதி மறுசீலனை குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருவதாகவும் ஆனால் சபாநாயகர் இதனை ஒருபொழுதும் கண்டு கொள்வதாகவே இல்லை என்றும் தெரிவித்த கனிமொழி அவர்கள், இதற்காகத்தான் தற்பொழுது போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றும் ஆனால் இந்த போராட்டங்களை கூட சபாநாயகர் கண்டு கொள்வதாக இல்லை என தெரிவித்திருக்கிறார்.
ஒரு சார்பாக பேசக்கூடிய சபாநாயகர் அவர்கள் எதிர் கட்சிகளே இருக்கக் கூடாது என்றும் எதிர் கருத்துக்கள் வருவது தனக்கு பிடிக்காத விஷயம் என்பது போலவே நடந்து கொள்வதாகவும் ஆளும் கட்சியான பாஜக ஒரு விஷயத்திற்காக போராடுகின்றனர் எதிர்க்கின்றனர் என்றால் அவர்களுக்கு துணை நிற்கக்கூடிய சபாநாயகர் ஏன் எங்களை மட்டும் உடைகளை மாற்றி வரும் படி அறிவுறுத்துகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறை செய்ய திமுக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதனை நாடாளுமன்றத்தில் புறக்கணித்து வந்ததால் அதனை எதிர்த்து டி-ஷர்ட், சால்வைகள் போன்றவற்றை திமுக மற்றும் திமுக உடன் சேர்ந்தால் எதிர்க்கட்சிகள் இணைந்து தங்களுடைய உடைகளின் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய பொழுது உடைகளை மாற்றி வருமாறு கூறி சபாநாயகர் அவையை தள்ளி வைத்திருக்கிறார். எனினும் தங்களுடைய போராட்டத்திற்காக உடைகளை மாற்றாமல் மீண்டும் அவையில் எதிர்க்கட்சிகள் இணைந்த பொழுது அவையை நாளை ஒத்தி வைப்பதாக தெரிவித்துவிட்டு சபாநாயகர் எழுந்து சென்றிருக்கிறார்.
இது ஒரு தலைப்பட்சமாக சபாநாயகர் உள்ளது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது என்றும் எதிர் கருத்துக்களை தெரிவிக்காமல் பாஜகவை போல வாழ்க வாழ்க என்று கோஷங்களை நாங்கள் எழுப்பினால் அதற்கு சபாநாயகர் தலையசைப்பார் போல என்று நகையாடி இருக்கிறார்.