இவர்களுக்கு இனி பட்டா வழங்க முடியாது!- அமைச்சர் சேகர் பாபு

0
151

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்க முடியாது என்றும், அதே போல் கோயில் நிலத்திற்குள் கடைகள் வைத்திருப்போருக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

கோயில் நிலங்களை அபகரிக்கும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவில் நிலங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட அரசுக்கு சொந்தமான கோயில் நிலங்களை அரசு பறிமுதல் செய்தது.

இது தொடர்பாக அமைச்சர் கூறியது, இதுவரை திமுக பதவியேற்று 55 நாட்கள் ஆகின்றது. இதுவரை 520 கோடி சொத்து மதிப்பிலான தமிழக கோயில் இடங்களை மீட்டுள்ளது. மேலும் சுமார் 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

 

கோயில் நிலங்களை ஆக்ரமித்து குடும்பம் நடத்தி வரும் குடும்பங்களுக்கும் பட்டா வழங்க முடியாது .அதே போல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் கோயிலுக்குள் உள்ள கடைகளுக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்த ராசிக்கு கடன் பிரச்சினைகள் தீரும்- 01-07-2021 Today Rasi Palan 01-07-2021
Next articleரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!