இவர்கள் இங்கு மருத்துவ படிப்பை தொடர முடியாது! இந்திய மருத்துவ ஆணையத்தில் இடம் இல்லை!
நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பு உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாகவும் ,சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் காரணமாகவும் அங்கு மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே அவர்களின் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில் மாணவர்களின் தரப்பு வாதிக்கப்பட்டது அதில் மனிதாபிமான அடிப்படையில் நான்காம் மற்றும் ஐந்தாம் ,ஆறாம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு வழங்கலாம் என கூறப்பட்டது.
மேலும் மத்திய அரசு தரப்பு வாதத்தில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர அனுமதி அளிக்க முடியாது.அதற்கு இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளில் இடம் இல்லை என கூறினார்.
இந்தியாவில் தற்பொழுது இருக்கும் மருத்துவ படிப்பு முறையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் உக்ரைன் போரினால் மருத்துவ படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யப்படும் என்றார்.
குறிப்பாக இவர்கள் யாரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்.இந்தியாவில் படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பை தொடர்கின்றனர்.இதனை தொடர்ந்து இந்த வாழக்கானது அடுத்த வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.