பொறாமையில் தான் பெரிதாக்குகிறார்கள்.. உதட்டு முத்த சர்ச்சைக்கு காரணம் கூறிய இந்திரஜா சங்கர்..!!

0
229
They magnify themselves in jealousy.
They magnify themselves in jealousy.

பொறாமையில் தான் பெரிதாக்குகிறார்கள்.. உதட்டு முத்த சர்ச்சைக்கு காரணம் கூறிய இந்திரஜா சங்கர்..!!

விஜய் டிவியில் இருந்து பிரபலமான ரோபோ சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது ஒரே மகள் இந்திரஜாவிற்கு கடந்த மாதம் ஊரே வியக்கும் விதமாக கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் சொந்த ஊரான மதுரையில் தான் இந்த திருமணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சென்னை நடந்த திருமண வரவேற்பு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல முக்கிய திரைபிரபலங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்த நாள் முதல் தற்போது வரை இந்திரஜா மற்றும் அவர் கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் தொடர்ந்து பல பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

இதற்கிடையில் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் எதிர்பாராத விதமாக ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்திரஜா – கார்த்திக் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி அவர்கள் கூறியிருப்பதாவது, “கண்ணத்தில் முத்தமிட முயன்ற சமயத்தில் அவர் திரும்பியதால் எதிர்பாராத விதமாக உதட்டில் முத்தம் கொடுத்து விட்டார்.

அக்காவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த மானங்கெட்டவன் என்று பலரும் இவரை திட்டி வருகிறார்கள். அவர்களே அக்கா என்று கூறிவிட்டு அதை ஏன் தவறாக பேச வேண்டும். நாங்கள் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளோம். அதனால் எங்கள் திருமணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி வருகிறார்கள்” என கூறியுள்ளார்.

Previous articleமக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!
Next articleபோட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!