இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

0
147
They no longer have a discount! Shocking news released by the central government!
They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர்.

இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இயங்க தொடங்கியுள்ளது.ஆனால் இன்னும் ஒரு சில தனியார் நிறுவங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர்.மேலும் கொரோனா காலத்தில் பல்வேறு பிரச்சனைகளால்  அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டது.

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி  நாக்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.முன்னதாக 34 சதவீதமாக இருந்தது.அவை தற்போது 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது.குறிப்பாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் வாக்குறுதியாக பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தப்படும் என உறுதியளித்தது.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிதி சுமை காரணமாக வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டு  எழுந்து வருகின்றது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அந்த கோரிக்கை தொடர்பாக அமைச்சரவை செயலாளரையும் சந்தித்தனர்.ஆனால் நிலுவை தொகை குறித்து பேசப்பட்ட பேச்சுவார்த்தையில்  முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதனால் நிலுவை தொகை கோரி ஊழியர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மேலும் பிரதமர் மோடியிடமும் முறையிட்டனர்.ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வேண்டிய 18 மாத நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர்.இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Previous articleதந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!!
Next articleமீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!