உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் !!

Photo of author

By Parthipan K

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் இவர் சன் சிங்கர் என்னும் பிரபல நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளியாக அறியப்பட்டார்.

நக்ஷத்ரா நாகேஷ் “சேட்டை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் இவர் வாயை மூட்டி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித் போன்ற படங்களில் துணைநடிகையாக நடித்து பிரபலமானார். சின்னத்திரை தொடர்களின் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வரும், நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சன் டிவி, விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானார். இவர் ஒரிரு  குறும்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை நக்ஷத்ரா நாகேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும், சரஸ்வதியும்” என்ற வீதியிலி நடித்து தற்போது படுபிசியான நடிகையாக உள்ளார்.

தற்போது நடிகை நக்ஷத்ரா நாகேஷ் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு கசப்பான சம்பவத்தை அவர் பேட்டியில் கூறியுள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் தான் கேரவேனில் உடை மாற்றும் ஐந்து ஆண்கள் தவறாக உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர் என்று வேதனை தெரிவித்தார். இது எனக்கு சங்கடமாக இருந்தது என்றும் அந்த நேரத்தில் என்னால் எதுவும் பேச முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். நான் உடை மாற்றுவதை அவர்கள் வைத்த கண் எடுக்காமல் உற்றுப் பார்த்து கொண்டு இருந்ததாக கூறினார். ஒரு பெண் உடை மாற்றும் போது ஆண்கள் இப்படியா பார்ப்பது? சினிமாவில் இப்படிப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடப்பதாகவும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்  வேதனைப்பட கூறினார். இதன் காரணமாக சினிமா வாய்ப்புகளை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதில் அதிக முக்கியத்துவம் தான் அளிப்பதாகவும் நக்ஷத்ரா நாகேஷ் குறிப்பிட்டுள்ளார்.