7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவங்களா!!! அப்போ ரவி கிருஷ்ணா ரெண்டாவது சாய்ஸா!!!
நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் 2004ம் ஆண்டு அகோடபர் மாதம் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு வழிகளில் எடுக்கப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் சார்பாக ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரித்திருந்தார். 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் கடந்தும் தற்பொழுது வரை இந்த திரைப்படத்திற்கு தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது.
இன்று வரை 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் 7ஜி பிருந்தாவன் காலனி திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. ரீரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 1.04 கோடி ருபாய் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரியா அவர்களிடமும் நடிகர். மாதவன் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் இவர்களால் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து நடிகர் ரவி கிருஷ்ணா அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பொழுது 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவலை நடிகர் ரவி கிருஷ்ணா அவர்களே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது.