கலக்கத்தில் அதிமுக! அந்த 3 ஸ்லீப்பர் செல் இவர்களா? தினகரன் கூறுவது யாரை?

0
175

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஒன்று தினகரன் அணி அமமுக எனவும் மற்றொன்று அதே அதிமுக EPS, OPS அணியாகவும் பிரிந்தது. உண்மையான அதிமுக EPS மற்றும் ops அணியிடம் தான் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் EPS, OPS அணி இருக்கிறது.

இதன் பின்னர் அதிமுக வில் இருந்து ஒரு சில சட்ட மன்ற உறுப்பினர் தினகரன் பக்கம் வர தொடங்கினர். இதனால் ஆரம்பத்தில் தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் அதிமுக-வில் இருப்பதாக கூறி வந்தார். அவரது இந்த பேச்சை கேட்டு யார் அந்த ஸ்லீப்பர்செல் என்று அதிமுக அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே திரிந்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், தினகரனின் உறவினர் திவாகரனுக்கு நெருக்கமான உணவுத்துறை அமைச்சர் காமராஜை கண்டுகொள்ளாமல் இதுநாள் வரை அதிமுக இருப்பதும் அதிசயமாகவே இருக்கிறது.

தற்போது அமமுக-விலிருந்து 3 எம்.எல்.ஏ-க்கள் விலகி சென்று அதிமுக-வில் இணைந்தனர். இதனால் தினகரன் பெரும் வருத்தத்தில் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணி பெரிதும் வாக்கு வங்கியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கட்சி தோல்வியை தழுவியது.

இதனால் அமமுக மொத்தமாக உடைந்து போய் விட்டது என்று பேசப்பட்டது. இதுபற்றி தினகரனிடம் கேட்டால் அவர் ரொம்ப கூலாக வெற்றி தோல்வி என்பது சாதாரண விசியம் தான். சட்ட மன்ற உறுப்பினர் அதிமுக பக்கம் செல்வது எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘இப்போது அதிமுக-வுக்கு சென்ற மூன்று எம்.எல்.ஏக்களும் என்னிடம் சொல்லிவிட்டுதான் அமமுக-விலிருந்து விலகினார்கள்’ என்று கூறியுள்ளார்.

இது அதிமுக பெருந்தலைகளுக்கு EPS, OPS அணிகளுக்கு கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. வந்தவர்கள்தான் உண்மையான ஸ்லீப்பர்செல்களாக இருப்பார்களோ என்று சந்தேகத்தோடே சுற்றி வருகிறார்களாம். என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articlePMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!
Next articleஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு, வெளிநடப்பு மட்டுமே செய்வார்! பாமக அன்புமணி காரசார பேச்சு!