மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதக்கி வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் சென்று வர முடியாமல் அனைவருக்கும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.என்னவெல்லாம் செய்யவேக் கூடாது என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.தர்பூசணி,வெண்பூசணி,வெள்ளரி பழம்,நுங்கு,இளநீர்,மோர் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.செயற்கை குளிர்பானங்களை குடிக்க கூடாது.டீ,காபி போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.காரமான உணவுகளை உட்கொள்ள கூடாது.மிளகு,மிளகாய் போன்ற உணவுப் பொருட்களை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதிய நேரத்தில் சூடான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.உடலை குளிர்ச்சிப்படுத்த ஐஸ்வாட்டர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.ஐஸ்வாட்டர் குடித்தால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.உடல் சூட்டை தணிக்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.தலைக்கு நல்லெண்ணய் வைத்து குளிக்கலாம்.
இரவில் கண்களை சுற்றி விளக்கெண்ணெய் தடவினால் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.
கோடை காலத்தில் தோல் அரிப்பு,தோல் சிவந்து போதல்,வியர்க்குரு கொப்பளங்கள்,கண் சூடு,கண் கட்டி,வேனல் கட்டி,அம்மை,உடல் சோர்வு,மயக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள் நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
கோடை வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்டவரை முதலில் நிழலான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.உடல் சூட்டை தணிக்க ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.இளநீர்,மோர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை பருக வைக்க வேண்டும்.பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை பெற உதவ வேண்டும்.